Thursday, July 23, 2026

கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாக்க விசேட குழு நியமனம்..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாக்க விசேட குழு நியமனம்..!


✍️ எஸ். சினீஸ் கான் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………..


✅👉 கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோதக் காணி ஆக்கிரமிப்புகள், முறையற்ற காணி நிரப்புதல்கள் மற்றும் கடலோர கட்டுமானங்களைத் தடுத்து நிறுத்த அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.


​இதற்கமைய, மாகாணத்தின் காணிகளையும் இயற்கைச் சூழலையும் பாதுகாப்பதற்காக ‘கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல்’ என்னும் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், விசேட பொலிஸ் அலகு ஒன்றையும் நிறுவ அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

​ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட விசேட யோசனைக்கே அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.  

​தென்மாகாண முன்னாள் காணி ஆணையாளரும், தற்போதைய தென்மாகாண உள்ளூராட்சி ஆணையாளருமான சேனக பல்லியகுருகே தலைமையில் இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.  


​கிழக்கு மாகாணத்தின் சமூக அமைப்பைக் கருத்திற்கொண்டும், அனைத்துச் சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் வகையிலும் இக்குழுவில் இரண்டு தமிழ் பிரதிநிதிகளும், இரண்டு முஸ்லிம் பிரதிநிதிகளும் மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  


நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் பெயர் விபரம்.


குழுத் தலைவர் (Committee Chairman):


 1. திரு. சேனக பல்லியகுருகே (Mr. Senaka Palliyaguruge)

   * உள்ளூராட்சி ஆணையாளர் - தென் மாகாணம்


குழு உறுப்பினர்கள் (Committee Members):


 2. திரு. பி.பி. கஸ்தூரியாரச்சி (Mr. P.B. Kasturiarachchi)

   * சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் (அம்பாறை)- அம்பாறை பிரிவு


 3. திருமதி. வளர்மதி ரவீந்திரன் (Mrs. Valarmathy Ravindran)

   * மாகாண காணி ஆணையாளர் - மாகாண காணி நிர்வாகத் திணைக்களம் (கிழக்கு மாகாணம்)


 4. திரு. ஏ.டி.எம். ரஃபீ (Mr. A.T.M. Rafee)

   * உள்ளூராட்சி ஆணையாளார் - கிழக்கு மாகாணம்


 5. திரு. வசந்த லியனகே (Mr. Wasantha Liyanage)

   * பிரதி வனப்பாதுகாவலர் (வடக்கு/கிழக்கு மாகாணம்)- வனப்பாதுகாப்பு திணைக்களம்


 6. செல்வி. ஹெஷானி சோமரத்ன (Ms. Heshani Somarathna)

   * உதவிப் பணிப்பாளர் - வனஜீவிகள் பாதுகாப்புத் திணைக்களம்


 7. திருமதி. பஞ்சாலி பெர்னாண்டோ (Mrs. Panchali Fernando)

   * சட்ட அதிகாரி - கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களம்


 8. திரு. அனுஷன் முனசிங்க (Mr. Anushan Munasinghe)

   * பிராந்திய உதவிப் பணிப்பாளர் (அம்பாறை/மட்டக்களப்பு) - தொல்பொருள் திணைக்களம்


 9. திரு. ஐ.எம். உபயகல்யாண (Mr. I.M. Ubhayakalyana)

   * வதிவிட நிறுவன மேலாளர் (முறைமை - சி, தெஹியத்தகண்டிய) - இலங்கை மகாவலி அதிகாரசபை


10. திரு. எஸ். பரமேஸ்வரன் (Mr. S. Parameswaran)

   * பிராந்திய உதவிப் பணிப்பாளர் (அம்பாறை) - காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு


 11. திரு. ஜி.ஆர்.எல். பெரேரா (Mr. G.R.L. Perera)

   * சிரேஷ்ட அளவை அத்தியாட்சகர் (அம்பாறை) - அளவைத் திணைக்களம்


 12. திரு. எம்.எச்.எம். மாஹீர் (Mr. M.H.M. Maheer)

   * முகாமையாளர் - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (பாசிக்குடா)


🌎 www.mihrajnews.com


✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: