🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 இறக்காமம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு..!
✍️ ஏ.எச்.றகீப்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………..
✅👉 பாடசாலை மாணவர்களின் கல்வி மற்றும் சமூகவியல் பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து அதற்கான தீர்வுகளையும் ஆலோசனைகளையும் வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வு 2026.07.15ம் திகதி புதன்கிழமை வரிப்பத்தான்சேனை அஸ்ஸபா வித்தியாலயத்தில்
சிறப்பாக நடைபெற்றது.
பிரதேச செயலாளர் அஷ்-ஷெய்க் எம். எஸ். எம். றஸ்ஸான் (நளீமி) அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ்,
உதவிப் பிரதேச செயலாளர் அய்மா நிஃமத்துல்லா அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வின் வளவாளராக உளவியலாளர் மற்றும் வாழ்க்கைத் திறன் பயிற்சியாளர் அஸ்னா சுயீதா முகம்மட் பைசால் கலந்து கொண்டதோடு பெற்றோருடன் செயற்பாட்டு ரீதியாகப் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
பெற்றோரால் முன்வைக்கப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வானது, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் நிதிப் பங்களிப்புடன் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களான எம்.ஐ. பஸீனா மற்றும் எம்.எச். வஹாப் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
மேலும், இந்நிகழ்வில் அஸ்ஸபா வித்தியாலய அதிபர் கே.எல். சியாத், உதவி அதிபர் ஐ.எல்.ஐ. றஸீம், உளவளத்துணை ஆசிரியரும் அறிவிப்பாளருமான எம். அன்சஹான், ஆசிரியர் யூ.எல். பைறூஸ், பிரதேச செயலக மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்களான சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் பி. யசோதா, பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். எம்.கே. சாஜிதா, முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம். இம்டாட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்










0 comments: