Saturday, July 18, 2026

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கோலாகலமாக நடைபெற்ற கவின்கலைப் போட்டி நிகழ்வு..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கோலாகலமாக நடைபெற்ற கவின்கலைப் போட்டி நிகழ்வு..!


✍️ யு.எல். அலி. ஜமாயில் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………………….


✅👉 கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான பாடசாலை கவின் கலைப் போட்டிகள் (15) புதன்கிழமை பாடசாலை வளாகத்தில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.


மேலும் பாடசாலை அதிபர் ஏ. ஜீ. எம். றிசாத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப் போட்டி நிகழ்வில், கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளரும், கோட்டக் கல்விப் பணிப்பாளருமான யூ.எல். றியால் அவர்கள் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.


மாணவர்களின் கலை, கலாசார மற்றும் படைப்பாற்றல் திறன்களை வெளிக்கொணரும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டிகளில், தரம் 6 முதல் தரம் 12 வரையான வகுப்புகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் ஆவலுடனும் உற்சாகத்துடனும் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.


இப்போட்டிகளுக்கான நடுவர்களாக (புள்ளி மதிப்பீட்டாளர்கள்) அழகியற்கல்வி ஆசிரிய ஆலோசகர் எம்.எம்.சியாம், EPSI இணைப்பாளர் வீ. தையீப் மற்றும் ஆசிரிய ஆலோசகர் (ISA) ஐ.எம்.மௌசூர் ஆகியோர் கலந்துகொண்டு நடுநிலைமையோடு புள்ளிகளை வழங்கினர்.


இந் நிகழ்வு மிகச் சிறப்பான முறையில் அரங்கேறுவதற்குக் கவின்கலைப் போட்டியின் திட்ட இணைப்பாளர்களான ஆசிரியர்களான எம். சி. ஹிஜாஸ் மற்றும் ஏ.ஆர். பைறூஸ்கான் ஆகியோர் ஏனைய ஆசிரியர்களுடன் இணைந்து அர்ப்பணிப்புடன் வழிகாட்டல்களை வழங்கியிருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்



















SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: