Wednesday, July 8, 2026

கொடியேற்ற விழாவை முன்னிட்டு மல்கம்பிட்டி பள்ளிவாசலில் மின் விளக்குகள் பொருத்தும் பணி ஆரம்பம்..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰


✅👉 கொடியேற்ற விழாவை முன்னிட்டு மல்கம்பிட்டி பள்ளிவாசலில் மின் விளக்குகள் பொருத்தும் பணி ஆரம்பம்..!


✍️ நூருல் ஹுதா உமர் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………….


✅👉 மல்கம்பிட்டி பள்ளிவாசல் மற்றும் கலந்தர் சிக்கந்தர் ஸியாரத் நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க, சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் நேரில் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள தேவைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.


இதன்போது பள்ளிவாசல் மற்றும் ஸியாரத் வளாகத்தில் நிலவும் அடிப்படை வசதிகள் குறித்து நிர்வாகத்தினருடன் விரிவாக ஆராயப்பட்டதுடன், எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி நடைபெறவுள்ள கொடியேற்ற விழாவை முன்னிட்டு, பள்ளிவாசலைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விளக்குகள் பொருத்தும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன.


இப்பணிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாகவும் சிரமமின்றியும் வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.


இந்த விஜயத்தில் மல்கம்பிட்டி பள்ளிவாசல் மற்றும் கலந்தர் சிக்கந்தர் ஸியாரத் தலைவர் எம்.ஏ.எம். உவைஸ், செயலாளர் யூ.எல்.ஏ. கரீம் உள்ளிட்ட நிர்வாக உறுப்பினர்களும் கலந்துகொண்டு, விழா ஏற்பாடுகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் தவிசாளருடன் கலந்துரையாடினர்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்






SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: