🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வெற்றிகரமாக நடைபெற்ற முதலுதவி பயிற்சி முகாம்..!
✍️ ஏ.எச்.றகீப்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………
✅👉 அவசரகால சூழ்நிலைகளில் சரியான முதலுதவியை வழங்கும் திறனை மேம்படுத்தும் நோக்கில் பாடசாலை மாணவர்களுக்கான முதலுதவி பயிற்சி முகாம் 2026.07.07ம் திகதி செவ்வாய்க்கிழமை வரிப்பத்தான்சேனை அல் - அமீன் மகா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பிரதேச செயலாளர் அஷ்-ஷெய்க் எம். எஸ். எம். றஸ்ஸான் (நளீமி) அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், உதவிப் பிரதேச செயலாளர் அய்மா நிஃமத்துல்லா அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
அவர் தனது தலைமை உரையில், பயிற்சி முகாமின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துடன், சமூகத்தில் ஒவ்வொருவரும் முதலுதவி அறிவைப் பெற்றிருப்பது உயிர்களைக் காப்பாற்றும் முக்கியமான திறனாகும் என வலியுறுத்தினார்.
பயிற்சிநெறியின் வளவாளராக கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் தொற்றா நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி
டாக்டர். ஏ. எஸ். எம். பௌஷாட் அவர்கள் கலந்து கொண்டு விபத்துகள் மற்றும் திடீர் உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முதலுதவி நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.
மேலும், காயங்களுக்குக் கட்டுப் போடுதல், இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்துதல், தீக்காயங்கள், எலும்பு முறிவுகள், மயக்கம், மூச்சுத்திணறல் போன்ற அவசரநிலைகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், CPR, செயன்முறை விளக்கங்களுடன் கற்பிக்கப்பட்டன.
பயிற்சியின் போது மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளை எழுப்பித் தெளிவுகளைப் பெற்றுக் கொண்டனர்.
செயன்முறைப் பயிற்சிகளில் நேரடியாக பங்கேற்று முதலுதவித் திறன்களை நடைமுறையிலும் கற்றுக்கொண்டனர்.
இத்தகைய பயிற்சிகள் மாணவர்களிடையே பொறுப்புணர்வு, தன்னம்பிக்கை மற்றும் சமூக சேவை மனப்பான்மையை வளர்க்கும் என்பதுடன், எதிர்காலங்களிலும் இதுபோன்ற பயிற்சி முகாம்களை தொடர்ந்தும் நடத்துவதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் இறக்காமம் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட அல் - அமீன் மகா வித்தியாலயம்,
அல் - மதீனா வித்தியாலயம், அஸ்-ஸபா வித்தியாலயம் ஆகியவற்றின் மாணவர்களும் பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
இந்நிகழ்வானது, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் நிதிப் பங்களிப்புடன் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் பி. யசோதா அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
மேலும், இந்நிகழ்வில், அல் - அமீன் மகா வித்தியாலய பாடசாலை அதிபர் எஸ். எல். கலந்தர் லெப்பை, பிரதேச செயலக மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்களான உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ. எச். றகீப், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். எம். கே. சாஜிதா, முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். எம். இம்டாட், பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம். ஐ. பஸீனா உட்பட குறித்த பாடசாலைகளின் பொறுப்பு ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்














0 comments: