🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் முன்னெடுப்பில்‘டெங்கற்ற கிழக்கு’ வேலைத்திட்டம்: அட்டாளச்சேனையில் முன்னேற்பாடுகள் குறித்து விசேட கலந்துரையாடல்..!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
நிருபர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………………..
✅👉 ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் முன்னெடுப்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் “டெங்கற்ற கிழக்கு” வேலைத்திட்டத்தின் கீழ், அட்டாளச்சேனை பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள டெங்கு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்பாடுகளை ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று (22) பிற்பகல் 5.00 மணியளவில் அட்டாளச்சேனை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலுக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் தலைமை தாங்கினார்.
இதில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர், தேசிய இளைஞர் அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எம். முஷர்ரப், கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன் (Ex.MMC), செயற்றிட்ட முகாமையாளர் எம்.ஐ. ஸாஹிர், அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் ஹக்கானி மஜீட், அட்டாளச்சேனை பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் அட்டாளச்சேனை இளைஞர் அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ரியா மசூர், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களின் புதல்வர் யு.எல். சபீர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, அட்டாளச்சேனை பிரதேசத்தில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ள சுற்றுச்சூழல் சுத்திகரிப்பு நடவடிக்கைகள், மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், இளைஞர்களின் பங்களிப்பு, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் சமூகப் பங்கேற்பை வலுப்படுத்தும் செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், அவற்றை திறம்பட நடைமுறைப்படுத்துவதற்கான செயல் திட்டங்களும் கலந்தாலோசிக்கப்பட்டன.
“டெங்கற்ற கிழக்கு” என்ற தொனிப்பொருளை மையமாகக் கொண்டு, கிழக்கு மாகாணத்தை டெங்கு அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்கும் சமூகப் பொறுப்புணர்வுடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்











0 comments: