Monday, June 15, 2026

ரஹ்மத் பவுண்டேசனின் மனிதநேயக் கரம் – தேவையுடைய குடும்பங்களுக்கு குழாய்க்கிணறுகள் அன்பளிப்பு..!

Ad 728x90


 🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 ரஹ்மத் பவுண்டேசனின் மனிதநேயக் கரம் – தேவையுடைய குடும்பங்களுக்கு குழாய்க்கிணறுகள் அன்பளிப்பு..!


✍️ ஏ.எஸ்.எம். அர்ஹம் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………


✅👉 "மனிதர்களுக்கான சிறந்த சேவை, அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதே" என்ற உயரிய சிந்தனையை நடைமுறைப்படுத்தி வரும் மனிதாபிமானி ரஹ்மத் மன்சூர் அவர்களின் மற்றுமொரு மனிதநேயச் செயற்பாடாக சாய்ந்தமருது பிரதேசத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பங்களுக்கு குழாய்க்கிணறுகள் அமைத்து வழங்கப்பட்டுள்ளன.


சமீப காலமாக அதிகரித்துள்ள நீர்க்கட்டணங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக குடிநீர் வசதிக்காக பல சிரமங்களை எதிர்நோக்கிய குடும்பங்களை இனங்கண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.


YWMA பேரவையின் அனுசரணையில், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட இக்குழாய்க்கிணறுகள், பயனாளிகளின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.


மக்களின் அத்தியாவசியத் தேவைகளை இனங்கண்டு, எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராது தொடர்ச்சியாக மனிதநேயப் பணிகளில் ஈடுபட்டு வரும் ரஹ்மத் மன்சூர் அவர்களின் இச்சேவை, அப்பிரதேச மக்களின் பாராட்டையும் நன்றியையும் பெற்றுள்ளது.


இந்நிகழ்வில் ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினர்கள், பயனாளிகள், சமூகப் பிரமுகர்கள் மற்றும் பிரதேச மக்கள் கலந்துகொண்டனர்.


மனிதாபிமானம், சமூகப் பொறுப்பு மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் ரஹ்மத் பவுண்டேசனின் பணிகள், சமூக மாற்றத்திற்கான முன்மாதிரியாகத் திகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்






SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: