Monday, June 15, 2026

சமூகம் நெருக்கடிகளைச் சந்திக்கும்போதெல்லாம் ஒலிக்கும் குரல் - MLAM ஹிஸ்புல்லாஹ்..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 சமூகம் நெருக்கடிகளைச் சந்திக்கும்போதெல்லாம் ஒலிக்கும் குரல் - MLAM ஹிஸ்புல்லாஹ்..!


✍️ எஸ். சினீஸ் கான் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……….


✅👉 எமது சமூகம் சொல்லொணாத் துயரங்களையும், நெருக்கடிகளையும், பல்வேறு சவால்களையும் எதிர்கொண்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், எவ்வித அச்சமுமின்றி, சமரசங்களுக்கு இடமளிக்காது முதன்முதலில் குரல் கொடுத்துவருபவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள்.


அரசியல் இலாபங்களுக்காகவும், பதவிகளுக்காகவும் மௌனமாக இருந்த தலைமைகளுக்கு மத்தியில், சமூகத்தின் இருப்பும் உரிமைகளும் கேள்விக்குறியாக்கப்பட்ட போதெல்லாம் துணிச்சலுடன் முன்னின்று போராடுபவர்


எமது உயிரினும் மேலான புனித அல்குர்ஆன் தடுத்து வைக்கப்பட்டிருந்த அந்த இருண்ட காலகட்டத்தில், ஒட்டுமொத்த சமூகமும் கவலையுடனும் அதிர்ச்சியுடனும் நின்றபோது, அல்குர்ஆனைத் தனது கைகளில் ஏந்தியபடி பாராளுமன்றத்திற்குள் கம்பீரமாக நுழைந்து, “எமது புனித நூலை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்று உரக்க முழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தலைவர் ஹிஸ்புல்லாஹ்.


அந்தக் குரல் அன்றோடு முடிவடையவில்லை. அல்குர்ஆனின் கண்ணியத்தையும் மரியாதையையும் பாதுகாக்கவும், அதனைச் சுற்றியிருந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் அவர் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறார்.


எந்தச் சூழ்நிலையிலும் சமூகத்தின் உரிமைகளுக்காக அஞ்சாது குரல் கொடுக்கும் தலைமைத்துவத்தின் அடையாளமாகவும், மக்களின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாகவும் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் என்றும் திகழ்ந்து வருகிறார்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்

SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: