Saturday, June 27, 2026

ஹஜ்ஜில் எந்தவித குறைகளும் ஏற்படவில்லை" என்ற பதில்கள், முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அரசாங்கம் குறித்து தவறான விம்பத்தை ஏற்படுத்தக்கூடும்..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 "ஹஜ்ஜில் எந்தவித குறைகளும் ஏற்படவில்லை" என்ற பதில்கள், முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அரசாங்கம் குறித்து தவறான விம்பத்தை ஏற்படுத்தக்கூடும்..!


✅👉 பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்.


✍️ எஸ். சினீஸ் கான் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………………..


✅👉 ஹஜ் யாத்திரியர்கள் எதிர்கொண்டதாகக் கூறப்படும் சிரமங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.


இன்று (26) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனை வலியுறுத்தினார்.


ஹஜ் யாத்திரியர்களுக்கு எந்தவிதமான குறைபாடுகளோ அசௌகரியங்களோ ஏற்படவில்லை, இதனை ஆராய சுயாதீனமான விசாரணைக் குழு தேவையில்லை என்றும், ஹஜ் குழுவின் அறிக்கை திருப்திகரமாக இருப்பதாகவும் அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டிருந்தார். எனினும், மினா மற்றும் முஸ்தலிபா பகுதிகளில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான ஹஜ் யாத்திரியர்கள் அடிப்படை வசதிகள் இன்றி கடுமையான சிரமங்களை எதிர்கொண்டதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.


குறிப்பாக, மலசலகூட வசதிகளைப் பயன்படுத்துவதற்கும், உணவு மற்றும் தேநீர் பெற்றுக்கொள்வதற்கும் யாத்திரியர்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்ததாக அறியமுடிகிறது.


மேலும், பாதிக்கப்பட்ட யாத்திரியர்கள் தாங்கள் எதிர்கொண்ட அவல நிலைகளை சமூக ஊடகங்கள் வாயிலாக காணொளிகள் மற்றும் பதிவுகளின் மூலம் பகிர்ந்துள்ளனர். நாட்டிற்கு திரும்பிய பின்னரும், விமான நிலையங்களிலேயே பலர் தங்களது அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்திருந்தனர்.


எனவே, ஹஜ் குழுவின் அறிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், அதற்கு வெளியே உள்ள உறுப்பினர்களைக் கொண்ட சுயாதீன விசாரணைக் குழுவொன்றை நியமித்து, உண்மை நிலையை ஆராய வேண்டும். அதனைத் தொடர்ந்து, அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.


மேலும், இம்முறை ஹஜ் யாத்திரையின் போது ஹாஜிகள் எதிர்கொண்ட அசௌகரியங்கள் குறித்து நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


இவ்வாறான சூழ்நிலையில், "எந்தவித குறைகளும் ஏற்படவில்லை" என்ற வகையிலான பதில்கள், முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அரசாங்கத்தையும் சம்பந்தப்பட்ட தரப்பினரையும் பற்றிய தவறான விம்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்தார்.


ஊடகப்பிரிவு


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்

SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: