Saturday, June 27, 2026

கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் 78ஆவது ஆண்டு நிறைவு விழா..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் 78ஆவது ஆண்டு நிறைவு விழா..!


✍️ நூருல் ஹுதா உமர் 


✅👉 கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் 78ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நினைவு நிகழ்வுகள் இன்று (25) பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைசால் அவர்களின் தலைமையில் பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றன.


பாடசாலையின் வரலாற்றுப் பயணத்தையும் கல்விச் சாதனைகளையும் நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலையின் 78 ஆண்டுகால கல்விச் சேவையை நினைவுகூரும் வகையில் பாடசாலை வரலாற்றை உள்ளடக்கி ஆசிரியர் எம்.வை.எம்.வை. இம்ரான் அவர்களினால் தொகுக்கப்பட்ட புத்தக வெளியீடும், நினைவு மரம் நடும் நிகழ்வும் நடைபெற்றது. எதிர்கால தலைமுறையினருக்கான பொறுப்புணர்வையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தையும் வலியுறுத்தும் நோக்கில் இந்த மரநடுகை முன்னெடுக்கப்பட்டது.


இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் பாடசாலைக்கான வலய இணைப்பாளர் ஜெஸ்மி மூஸா, அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ.எல்.நூருல் ஹுதா, கல்முனை பிர்லியண்ட் விளையாட்டுக்கழக தலைவர் எஸ்.எம். ஹாஜா, பயிற்றுவிப்பாளர் யூ.எல். பழீல், பழைய மாணவர்கள் சங்க செயலாளர் யூ.எல்.எம். ஹாஜா உட்பட பழைய மாணவர்கள் சங்கத்தினர், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினர், கல்முனை பிர்லியண்ட் விளையாட்டுக்கழகத்தினர், பழைய மாணவிகள் சங்கத்தினர் என பலரும் கௌரவ மற்றும் விசேட அதிதிகளாக கலந்து கொண்டனர். 


மேலும், பாடசாலையின் 78ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் கல்முனை பிர்லியண்ட் விளையாட்டுக்கழக அனுசரணையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள "Brilliant Gateway" நுழைவாயிலின் திறப்பு நிகழ்வும் இடம்பெற்றது. மேலும் பழைய மாணவர்களினால் நினைவுப்பேனா (Commemorative Pen) அறிமுகப்படுத்தப்பட்டது. கல்வியின் அடையாளமாகவும், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களின் பிணைப்பை வலுப்படுத்தும் நினைவுச் சின்னமாகவும் இந்தப் பேனா அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர் தலைவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தியில் பங்காற்றிவரும் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பாடசாலை பற்றிய வரலாற்று பார்வையை ஓய்வுபெற்ற ஆசிரியர் யூ.எம்.அலி நிகழ்த்தியதுடன் துஆ பிரார்த்தனையை கல்முனை பதுரியா ஜும்மா பள்ளிவாசல் இமாம் ஜே.எம். றிபாஸ் நஜாஹி நிகழ்த்தினார். 


அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் 78ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள், கல்வி, ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றை மையப்படுத்திய பாடசாலையின் நீண்டகால பயணத்தை நினைவுகூரும் வகையிலும், எதிர்கால வளர்ச்சிக்கான புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கும் வகையிலும் அமைந்திருந்தது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்



























SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: