Saturday, June 20, 2026

2025 O/L பரீட்சையில் சிறப்பாக சித்தியடைந்த மாணவச் செல்வங்களுக்கு ரஹ்மத் மன்சூரின் உயர்ந்த பாராட்டும் இதயம் கனிந்த வாழ்த்துச் செய்தியும்..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 2025 O/L பரீட்சையில் சிறப்பாக சித்தியடைந்த மாணவச் செல்வங்களுக்கு ரஹ்மத் மன்சூரின் உயர்ந்த பாராட்டும் இதயம் கனிந்த வாழ்த்துச் செய்தியும்..!


✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………………..


✅👉 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்த எமது அன்பு மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


இன்றைய நவீன உலகின் போட்டி நிறைந்த சூழலிலும், குறுகிய காலத் தயாரிப்புகளுடனும், பல்வேறு சவால்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் மத்தியில் கூட விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் தன்னம்பிக்கையுடன் நீங்கள் பெற்றுள்ள இந்த வெற்றி மிகவும் பாராட்டத்தக்கது.


இந்த மகத்தான சாதனையின் பின்னால், தமது பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பல தியாகங்களைச் செய்து, பொருளாதார சிரமங்களையும் பொருட்படுத்தாமல் உறுதுணையாக நின்ற பெற்றோர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அதேபோன்று, இரவு பகலாக அயராது உழைத்து மாணவர்களின் அறிவுப் பயணத்திற்கு வழிகாட்டிய ஆசிரியர், ஆசிரியைகளுக்கும், கல்விச் சூழலை சிறப்பாக அமைத்துத் தந்த அதிபர்கள் மற்றும் கல்விச் சமூகத்தின் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


இன்றைய வெற்றி உங்கள் எதிர்காலத்தின் முதல் படிக்கட்டாக அமையட்டும். மேலும் உயர்ந்த இலக்குகளை நோக்கி தன்னம்பிக்கையுடன் பயணித்து, சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் சிறந்த பிரஜைகளாக நீங்கள் திகழ எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.


வாழ்த்துகளுடன்,


ரஹ்மத் மன்சூர்

ஸ்தாபகர் – ரஹ்மத் பவுண்டேஷன்

தேசிய பொருளாளர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: