🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 ரஹ்மத் பவுண்டேசன் மூலம் கல்முனை பிரதேசத்தில் குழாய்க்கிணறுகள் அன்பளிப்பு..!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………
✅👉 சமீபகாலமாக நிலவி வரும் பொருளாதார பிரச்சினையின் காரணமாக அதிகரித்திருக்கின்ற நீர்க்கட்டணங்களினால் மிகுந்த அசெளகரியங்களுக்கு உள்ளாகி இருக்க கூடிய கல்முனை பிரதேசத்தில் மிகவும் தேவையுடைய சில பயனாளர்களை இனங்கண்டு இவ் அசெளகரியங்களை நிவர்த்தி செய்யும் முகமாக இவ் வேலைத்திட்டம் முன்னேடுக்கப்படுகின்றது.
இதில் தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கான குழாய்க்கிணறுகள் YWMA பேரவையின் அனுசரணையில் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் அமைப்பின் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களினால் பயனாளிகள் பாவனைக்காக திறந்து கையளித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினர்கள், குறித்த பயனாளர்கள் மற்றும் பிரதேசவாசிகளும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்






0 comments: