Monday, May 25, 2026

ரஹ்மத் பவுண்டேசன் மூலம் கல்முனை பிரதேசத்தில் குழாய்க்கிணறுகள் அன்பளிப்பு..!

Ad 728x90

 




🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉  ரஹ்மத் பவுண்டேசன் மூலம் கல்முனை பிரதேசத்தில் குழாய்க்கிணறுகள் அன்பளிப்பு..!


✍️  ஏ.எஸ்.எம்.அர்ஹம் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………


✅👉  சமீபகாலமாக நாட்டில் நிலவி வரும் பொருளாதார சவால்கள் மற்றும் அதிகரித்து வரும் நீர்க்கட்டணங்களினால் பல குடும்பங்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றன.


 குறிப்பாக கல்முனை பிரதேசத்தில் வாழும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மற்றும் மிகவும் தேவையுடைய குடும்பங்களை இனங்கண்டு, அவர்களின் குடிநீர் தேவைகளை நிவர்த்தி செய்யும் உயரிய நோக்குடன் ரஹ்மத் பவுண்டேசன் இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.


அதன்படி தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்காக, ரஹ்மத் பவுண்டேசனின் அனுசரணையில் குழாய்க்கிணறுகள் மிகக் குறுகிய காலத்திற்குள் அமைக்கப்பட்டு, அவை பயனாளிகளின் பாவனைக்காக திறந்து கையளிக்கப்பட்டன.


இந்நிகழ்வில் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் கலந்து கொண்டு, தனது பொற்கரங்களினால் குறித்த குழாய்க்கிணறுகளை திறந்து வைத்தார்.


மேலும், இந்நிகழ்வில் ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினர்கள், பயனாளிகள் மற்றும் பிரதேச மக்கள் பலரும் கலந்து கொண்டு இவ்வுயரிய சமூக சேவைத்திட்டத்தை பாராட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.


“மக்களின் தேவையை உணர்ந்து, அவர்களின் வாழ்வில் நிம்மதியை உருவாக்குவது தான் உண்மையான சமூக சேவை” என்ற உயரிய நோக்குடன் ரஹ்மத் பவுண்டேசன் தொடர்ந்து பல மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ  எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்




SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: