🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 கல்முனை முன்னாள் மாநகர சபை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் விடுக்கும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து செய்தி..!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………
✅👉 ஈதுல் அழ்ஹா” பெருநாளை முன்னிட்டு, உலக முஸ்லிம்கள் அனைவரும் தியாகத்தின் உயர்ந்த மகத்துவத்தையும், இறைநம்பிக்கையின் ஆழத்தையும் நினைவுகூரும் இந்த புனித நன்னாளில், மனிதகுலத்தின் அமைதி மற்றும் ஒற்றுமைக்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு பிரார்த்திப்போம்.
இன்று பலஸ்தீனம், ஈரான், லெபனான் உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் போர், அநீதி மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளால் துன்புறும் எம் சகோதர, சகோதரிகளின் வேதனைகள் எம் இதயங்களை கனக்கச் செய்கின்றன.
அவர்களின் துயரங்கள் நீங்கி, அமைதியும் பாதுகாப்பும் நிறைந்த வாழ்வு அவர்களுக்கு விரைவில் கிட்டிட அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம்.
அதேபோல், எம் தாய்நாடு இலங்கையில் நிலையான சமாதானம், பொருளாதார வளம், இன நல்லிணக்கம் மற்றும் மனித நேயம் வேரூன்றி, அனைத்து மக்களும் அச்சமின்றி ஒற்றுமையுடனும் சகோதரத்துவ உணர்வுடனும் வாழும் சூழல் உருவாக அல்லாஹ் அருள் புரிவானாக.
இந்த ஈதுல் அழ்ஹா திருநாள், தியாகம், பகிர்வு, அன்பு மற்றும் மனிதாபிமானத்தின் அருமையை எம் உள்ளங்களில் மேலும் வலுப்படுத்தட்டும்.
அனைவருக்கும் இனிய “ஈதுல் அழ்ஹா” நல்வாழ்த்துக்கள்.
ஈத் முபாரக்!
ரஹ்மத் மன்சூர்
கல்முனை முன்னாள் மாநகர சபை பிரதி முதல்வர்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொருளாளர்
ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகத் தலைவர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


0 comments: