Wednesday, May 27, 2026

நற்பிட்டிமுனை ஐ.ஆர்.எம் பவுண்டேஷன் உதைப்பந்தாட்டத் தொடர்: ‘ரிபிள் ஐ’ அணி சாம்பியன்..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 நற்பிட்டிமுனை ஐ.ஆர்.எம் பவுண்டேஷன் உதைப்பந்தாட்டத் தொடர்: ‘ரிபிள் ஐ’ அணி சாம்பியன்..!


முன்னாள் எம்.பி எச்.எம்.எம் ஹரீஸ் பிரதம அதிதியாக பங்கேற்பு


​✍️ சர்ஜுன் லாபீர் 


✅👉 "போதையற்ற இளைஞர் சமூகத்தை நோக்கி" எனும் ஆரோக்கியமான தொனிப்பொருளை முன்னிறுத்தி, நற்பிட்டிமுனை ஐ.ஆர்.எம் (IRM) பவுண்டேஷன் பெருமையுடன் ஏற்பாடு செய்திருந்த சினேகபூர்வ உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி (26) செவ்வாய்க்கிழமை நற்பிட்டிமுனை அஸ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் விமரிசையாக நடைபெற்றது.

ஐ.ஆர்.எம் பவுண்டேஷனின் தலைவர் ஏ.ஆர். இம்தியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டி நிகழ்வில், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிரேஸ்ட சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

​இப்போட்டியில் சிறப்பு அதிதிகளாக நற்பிட்டிமுனை கிராமத்தின் ஆரம்பகால உதைப்பந்தாட்ட வீரர்களும், போட்டி அனுசரணையாளர்களும் கலந்துகொண்டனர். இதன்போது, நற்பிட்டிமுனை கிராமத்தின் உதைப்பந்தாட்டத் துறை வளர்ச்சிக்கு ஆரம்பகாலம் தொட்டு அளப்பரிய பங்களிப்பை வழங்கிய மூத்த வீரர்கள் பொன்னாடை போர்த்தி, கௌரவிக்கப்பட்டனர்.

​ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான சினேகபூர்வ இறுதிப் போட்டியில், நற்பிட்டிமுனை ரிபில் ஐ விளையாட்டுக் கழகமும், நற்பிட்டிமுனை என்.எப்.சி (NFC) விளையாட்டு கழகமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் சமநிலை வகித்ததால், வெற்றியாளரைத் தீர்மானிக்க வழங்கப்பட்ட தண்டனை உதை (Penalty Shootout) முறையில் அபாரமாக விளையாடிய 'ரிபில் ஐ' அணி வெற்றி பெற்று, இச்சுற்றுப்போட்டியின் சாம்பியன் கிண்ணத்தைக் தமதாக்கிக் கொண்டது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்









SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: