Friday, May 22, 2026

கல்முனை கிரீன்ஃபீல்ட் வீட்டுத் திட்டத்தில் இருந்து வைத்தியத் துறைக்கு தெரிவாகிய இரண்டு மாணவர்களுக்கு, கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனினால் மடிக்கணனிகள் மற்றும் வைத்திய உபகரணங்கள் வழங்கி வைப்பு..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 கல்முனை கிரீன்ஃபீல்ட் வீட்டுத் திட்டத்தில் இருந்து வைத்தியத் துறைக்கு தெரிவாகிய இரண்டு மாணவர்களுக்கு, கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனினால் மடிக்கணனிகள் மற்றும் வைத்திய உபகரணங்கள் வழங்கி வைப்பு..!


✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………..


✅👉 கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க, குறுகிய காலத்திலேயே தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்ட கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன்,கல்முனை கிரீன்ஃபீல்ட் வீட்டுத் திட்டத்தில் இருந்து மருத்துவ பீடத்திற்கு தெரிவாகிய இம்மாணவர்களை கௌரவிக்கும் நோக்கில் முதல் கட்டமாக இவ்வுதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.


இன்று (22) கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு, கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பின் உறுப்பினரும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவருமான சகோதரர் எம்.ஏ.எம் அப்கி அமீன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இடம்பெற்றது.


மாணவர்களுக்கான மடிக்கணனிகள் மற்றும் வைத்திய உபகரணங்களை, கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் தலைவரும், கல்முனை முன்னாள் மாநகர பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் தனது கரங்களினால் வழங்கி வைத்தார்.


எதிர்காலத்தில் சமூகத்திற்கு சேவை செய்யவுள்ள இளம் மருத்துவர்களை ஊக்குவிக்கும் இந்த அரிய முயற்சி, கல்விக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் ரஹ்மத் பவுண்டேஷன் வழங்கி வரும் தொடர்ச்சியான பங்களிப்பின் இன்னொரு சிறப்பான அத்தியாயமாக அமைந்தது.


 இந்நிகழ்வில் கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பின் செயலாளரும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவருமான சகோதரர் ஆர்.எம் சஜாத் மற்றும் பெற்றோர்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் பவுண்டேஷனின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


கல்வி வழியே சமூக முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும் இத்தகைய பணிகள், இளைஞர் சமூகத்திற்கு புதிய நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிப்பவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: