🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 சாய்ந்தமருது தைபா பெண்கள் அரபுக் கல்லூரியில்
ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் வுழு நீர்த் தொகுதி திறந்து வைப்பு..!
✦ மனிதநேயமும் மார்க்கப் பணியும் இணையும் உன்னத சமூகச் சேவை ✦
✍️ ஏ. எஸ். எம். அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………
✅👉 சமூகத்தின் ஆன்மீக மற்றும் அடிப்படை தேவைகளை ஆழமாக உணர்ந்து, மனிதநேய சேவைகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஏற்பாட்டில், சாய்ந்தமருது தைபா பெண்கள் அரபுக் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட வுழு நீர்த் தொகுதி புனித அரஃபா தினத்தை முன்னிட்டு சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கல்முனை முன்னாள் மாநகர சபை பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள், மாணவிகளின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட இவ்வுழு நீர்த் தொகுதியை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து கையளித்தார்.
தினந்தோறும் தொழுகை வழிபாடுகளுக்காக வுழு செய்யும் மாணவிகளுக்கு சுத்தமானதும் சௌகரியமானதுமான நீர் வசதியை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டம், கல்வி மற்றும் மார்க்கச் சூழலை மேலும் சிறப்புறச் செய்யும் அரிய சமூக நலச் சேவையாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக மாணவிகளின் சுகாதாரம், ஒழுக்கம், ஆன்மீகத் தூய்மை மற்றும் வசதிகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்நீர் தொகுதி, அரபுக் கல்லூரியின் வளர்ச்சியில் மறக்கமுடியாத பங்களிப்பாக அமைந்துள்ளது.
இந்நிகழ்வில் அரபுக் கல்லூரியின் அதிபர் ஆதம்பாவா மௌலவி, நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவிகள், பொதுமக்கள் மற்றும் ரஹ்மத் பவுண்டேஷன் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
“மக்களின் தேவையே எமது சேவையின் நோக்கம்” என்ற உயரிய எண்ணத்துடன் செயல்பட்டு வரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன், கல்வி, சமூக நலம், மார்க்க சேவை மற்றும் மனிதாபிமான பணிகள் வழியாக சமூக முன்னேற்றத்திற்கு தொடர்ந்தும் உறுதியான பங்களிப்புகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
















0 comments: