Tuesday, May 19, 2026

மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி : ஹாதி இல்லம் சம்பியனானது..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி : ஹாதி இல்லம் சம்பியனானது..!


✍️ நூருல் ஹுதா உமர் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………….


✅👉 சாய்ந்தமருது மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டு போட்டி நிகழ்வு 13 வருடங்களின் பின்னர் 18 திங்கட்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.


பழைய மாணவர்கள் அமைப்பின் பூரண அனுசரணை மற்றும் ஆதரவுடன் பாடசாலை அதிபர் எம்.சி. நஸ்லின் ரிப்கா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை கரையோர பிராந்திய அபிவிருத்திக் குழுத் தலைவருமான ஏ. அதம்பாவா கலந்து கொண்டார்.


கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிமனை பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபிர் கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக கல்முனை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எம். ஹஸீன், எம்.எல்.எம். முதர்ரிஸ், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் அஸ்மா ஏ. மாலிக், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள், பிராந்திய பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் பல்வேறு விளையாட்டு திறன்கள் வெளிப்படுத்தப்பட்டதுடன் 326 புள்ளிகளை பெற்று ஹாதி இல்லம் (பச்சை) இம்முறையும் மீண்டும் சம்பியானது. இரண்டாம் இடத்தை 288 புள்ளிகளுடன் வாபி இல்லமும் மூன்றாம் இடத்தை 236 புள்ளிகளுடன் ராஜி இல்லமும் தனதாக்கி கொண்டது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்











SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: