Sunday, May 17, 2026

ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமருக்கு சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய சமூகத்தினால் பாராட்டு : வீடு தேடிச் சென்று கௌரவிப்பு..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉  ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமருக்கு சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய சமூகத்தினால் பாராட்டு : வீடு தேடிச் சென்று கௌரவிப்பு..!


✍️  எம்.என்.எம். அப்ராஸ் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………..


✅👉  அண்மையில் துருக்கிக்கு விஜயம் செய்த ஊடகக் குழுவில் இடம்பெற்றதுடன், 2025 ஆம் ஆண்டுக்கான விபரணக் கட்டுரைப் பிரிவில் தேசிய விருதை வென்ற ஊடகவியலாளர் Noorul Hutha Umarநூருல் ஹுதா உமர் அவர்கள் சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய சமூகத்தினால் கௌரவிக்கப்பட்டார்.


பிரதேச கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு பணிகளை முன்னெடுத்து வரும் அல்-மீஸான் பௌண்டேஷனின் தவிசாளராகவும் நூருல் ஹுதா உமர் பணியாற்றி வருகிறார்.


இந்நிலையில், அவரின் ஊடகத்துறை பணிகள் மற்றும் கல்விச் சேவைகளை பாராட்டும் வகையில் கல்வி  சமூகத்தினர் அவரது இல்லத்திற்கே நேரில் சென்று கௌரவிப்பு நிகழ்வை நடாத்தினர்.


இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன், பிரதி அதிபர் எப்.எம்.ஆர். ஹாதிம், ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர், கல்விசாரா ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பாராட்டுகளைத் தெரிவித்தனர். இதன்போது, ஊடகம் மற்றும் சமூக சேவைகள் ஊடாக இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் நூருல் ஹுதா உமரின் பங்களிப்புகள் உயரமாக பாராட்டப்பட்டன.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ  எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்

SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: