Tuesday, May 12, 2026

தொடரும் கடல் கொள்ளைக்கு தீர்வு கோரி சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉  தொடரும் கடல் கொள்ளைக்கு தீர்வு கோரி சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்..!


✍️  நூருல் ஹுதா உமர் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………..


✅👉  சாய்ந்தமருது கடற்பரப்பில் தொடர்ந்து இடம்பெற்று வரும் கடல் வள கொள்ளை மற்றும் வெளிமாவட்ட மீனவர்களின் சட்டவிரோத அத்துமீறிய கொள்ளை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாய்ந்தமருது பகுதி மீனவர்கள் இன்று படகுகளுடன் வீதியில் இறங்கி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சாய்ந்தமருது பிரதான கடற்கரை வீதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது, பல மீன்பிடி படகுகள் வீதிக்கு கொண்டு வரப்பட்டு போக்குவரத்து ஒரு காலப்பகுதிக்கு பாதிக்கப்பட்டது. “எமது கடல் வளங்களை பாதுகாக்க வேண்டும்”, “உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள்”, “சட்டவிரோத கடல் கொள்ளையை உடனடியாக நிறுத்துங்கள்” போன்ற கோசங்களை வெளியிட்டு மீனவர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.


போராட்டத்தில் கலந்துகொண்ட மீனவர்கள் தெரிவிக்கையில், வெளிப்பகுதிகளில் இருந்து வரும் சிலர் சட்டவிரோதமான முறையில் மீன்களை சூறையாடுவதால், உள்ளூர் மீனவர்களின் நாளாந்த வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டனர். மேலும், பல முறை அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை நிரந்தர தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.


இந்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையீடு செய்து கடல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் மேலும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர். பொலிசார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ  எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்







SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: