Sunday, May 10, 2026

மருதம் கலைக்கூடல் மன்றத்தினால் வித்தகர், இளங்கலைஞர் விருது பெற்றோர் கௌரவிப்பு..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 மருதம் கலைக்கூடல் மன்றத்தினால் வித்தகர், இளங்கலைஞர் விருது பெற்றோர் கௌரவிப்பு..!


✍️ நூருல் ஹுதா உமர் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………….


✅👉 மருதம் கலைக்கூடல் மன்றத்தின் மாதாந்த அமர்வு சனிக்கிழமை இரவு சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் வித்தியாலய கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு அமைப்பின் தலைவர் கலைஞர் அஸ்வான் எஸ். மௌலானா தலைமையில் இடம்பெற்றது.


நிகழ்வில் சாய்ந்தமருது கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஸ்மி மூஸா, ஓய்வு பெற்ற அதிபர் யூ.எல். நஸார், கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். நௌசாத் உள்ளிட்ட கலை, இலக்கிய மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


இதன்போது கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்திய கலாசார விழாவில் 2025 ஆம் ஆண்டிற்கான “வித்தகர் விருது” பெற்ற ஓய்வு பெற்ற கலாசார உத்தியோகத்தரும் எழுத்தாளருமான எம்.ஐ. அஸ்ரப் அவர்களும், “இளம் கலைஞர் விருது” பெற்ற சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். நௌபீல் அவர்களும் விசேடமாக கௌரவிக்கப்பட்டனர்.


கலை மற்றும் கலாசார துறைகளில் இவர்களின் நீண்டகால பங்களிப்புகள் பாராட்டப்பட்டதுடன், இளம் தலைமுறைக்கு முன்மாதிரியாக திகழ்வதாகவும் நிகழ்வில் கருத்துகள் வெளியிடப்பட்டன.


மேலும், கலை மற்றும் இலக்கிய செயற்பாடுகளை சமூக மட்டத்தில் வலுப்படுத்தும் நோக்கில் மருதம் கலைக்கூடல் மன்றம் முன்னெடுத்து வரும் பணிகள் தொடர்பாகவும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. நிகழ்வு கலாசார மற்றும் கலை ஆர்வலர்களின் உற்சாகமான பங்கேற்புடன் நிறைவுற்றது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்








SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: