Friday, May 22, 2026

கல்முனை நூறானியா ஜும்மா பள்ளிவாசலின் கட்டிட வேலைத்திட்டத்திற்கு ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டில் 2.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉  கல்முனை நூறானியா ஜும்மா பள்ளிவாசலின் கட்டிட வேலைத்திட்டத்திற்கு ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டில் 2.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு..!


✍️  ஏ.எஸ்.எம்.அர்ஹம் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………..


✅👉  இறை இல்லத்தின் அபிவிருத்தியை நோக்கி அரிய சமூகச் சேவை நிகழ்வு ஒன்று கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் தலைமைக் காரியாலயத்தில் (21) நடைபெற்றது.


கல்முனை நூறானியா ஜும்மா பள்ளிவாசலின் மூன்றாம் கட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஏற்பாட்டில் மொத்தம் 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அதன் இரண்டாம் கட்டமாக 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலை இன்று வழங்கி வைக்கப்பட்டது.


இக்காசோலையை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும், கல்முனை முன்னாள் மாநகர சபை பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் தலைமைக் காரியாலயத்தில் வைத்து வழங்கினார்.


இந்நிகழ்வில் கல்முனை நூறானியா ஜும்மா பள்ளிவாசலின் தலைவர், நிர்வாகத்தினர், பள்ளிவாசல் உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு இந்நற்காரியத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

இறை இல்லத்தின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய சேவைகள் சமூக ஒற்றுமையையும் இறைபக்தியையும் வலுப்படுத்தும் உயரிய பணியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ  எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்










SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: