Wednesday, April 8, 2026

சம்மாந்துறை அல்-அர்சத் மகா வித்தியாலயத்திற்கு நவீன மின்விளக்கு தொகுதிகள் வழங்கல்..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 சம்மாந்துறை அல்-அர்சத் மகா வித்தியாலயத்திற்கு நவீன மின்விளக்கு தொகுதிகள் வழங்கல்..!


✍️ நூருல் ஹுதா உமர் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……….:


✅👉 பின்தங்கிய மாணவர்கள் அதிகம் கல்வி பயிலும் சம்மாந்துறை கமு/சது/ அல்-அர்சத் மகா வித்தியாலயத்தின் கல்வி சூழலை மேம்படுத்தும் நோக்கில், ரூபாய் நான்கு இலட்சம் பெறுமதியான நவீன மின்விளக்கு தொகுதிகள் இன்று (02) வழங்கப்பட்டன.


இத்தொகுதிகளை சம்மாந்துறை “வன் என் வன்” டிரான்ஸ்போர்ட் சங்கத்தின் பிரதிநிதிகள், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹீர் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.


யானை தாக்குதலில் இருந்து பாடசாலையை பாதுகாக்கவும் பாடசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், மாணவர்கள் சிறந்த கல்வி சூழலில் பயிலும் வகையிலும் இந்த நவீன மின்விளக்கு தொகுதிகள் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிகழ்வில் தொடர்புடைய தரப்பினரும், சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். பாடசாலையில் இந்த நவீன மின்விளக்கு தொகுதிகளை சம்மாந்துறை பிரதேச சபை ஊடாக பொருத்தும் நோக்கில் இந்த மின்விளக்கு தொகுதிகள் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளாரிடம் கையளிக்கப்பட்டது 


இத்தகைய சமூகப் பொறுப்புணர்வு செயல்கள் கல்வி முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுகின்றன என்பதையும், எதிர்காலத்திலும் இதுபோன்ற உதவிகள் தொடர வேண்டும் என்பதையும் கல்வி வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: