Friday, April 17, 2026

நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளரின் செயல்பாடுகள் குறித்து கடும் குற்றச்சாட்டு: உறுப்பினர்கள் வெளிநடப்பு..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉  நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளரின் செயல்பாடுகள் குறித்து கடும் குற்றச்சாட்டு: உறுப்பினர்கள் வெளிநடப்பு..!


✍️  நூருல் ஹுதா உமர் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇


✅👉  நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் அவர்களின் செயல்பாடுகள் தொடர்பாக கடும் எதிர்ப்பும் குற்றச்சாட்டும் எழுந்துள்ளன. பிரதேச சபை உறுப்பினர்களின் அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஜனநாயக நடைமுறைகளை மீறுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


இவ்விடயம் தொடர்பாக இன்று நாவிதன்வெளியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் முன்னணி பிரதித்தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான எம்.ஏ. நளீர், தவிசாளர் தன்னிச்சையான முறையில் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.


அவர் மேலும் கூறுகையில், நாவிதன்வெளி பிரதேச சபையினதும் உறுப்பினர்களினதும் அனுமதியின்றி, சம்மாந்துறை பிரதேச சபை எல்லைகளுக்குள் சேவையாற்ற மின்னிணைப்பு ஊழியர்கள் அனுப்பப்படுவது மிகக் கவலைக்கிடமானதாகும் என குறிப்பிட்டார். இவ்வாறு அனுப்பப்படும் ஊழியர்களுக்கு ஏதேனும் விபத்து அல்லது சேதம் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை யார் ஏற்கப் போகின்றனர் என்ற கேள்வியும் எழுப்பினார்.


மேலும், தவிசாளர் சட்டநெறிகளையும் நிர்வாக ஒழுங்குகளையும் மீறி செயல்பட்டு வருவதாகவும், இது பிரதேச சபையின் ஒழுங்குமுறையைக் கேள்விக்குறியாக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


நேற்று நடைபெற்ற நாவிதன்வெளி பிரதேச சபையின் 10வது கூட்டத் தொடரில், தவிசாளரின் இச்செயல்பாடுகளை கண்டித்து, ஐக்கிய மக்கள் முன்னணி சார்பிலான சுயாட்சி குழு உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி உறுப்பினரும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ததாக அவர் தெரிவித்தார்.


மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் தமக்கு, தமது பிரதேசத்தில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும், அதுவே நல்லாட்சிக்கான அடிப்படை என்றும் அவர் வலியுறுத்தினார். இத்துடன், “மக்களின் குரலாக தொடர்ந்தும் ஒலிப்போம்” என உறுதியளித்த அவர், மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்க தொடர்ந்து செயல்படுவோம் என்றும் தெரிவித்தார்.


இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கையும் முன்வைத்த அவர் மக்கள் நலனை தவிசாளர் முன்னிறுத்தி செயற்பட முன்வரவேண்டும் என்று வலியுறுத்தினார்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ  எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: