𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 

…………
இந்நிகழ்வு, சமூக உறவு, சகோதரத்துவம் மற்றும் மனிதநேயத்தின் உயர்ந்த பண்புகளை வெளிப்படுத்தும் வகையில் இவ் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.
மேலும், இந்நிகழ்வு சமூகச் செயற்பாடுகளின் ஒளிரும் உதாரணமாக திகழ்ந்தது. கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொருளாளரும், ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் வழிநடத்தலில் இந்நிகழ்வு மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில் பள்ளிவாசல் தலைவர் முன்னால் அதிபர் இஸ்மாயில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட செயலாளர் சமால்தீன் மற்றும் நிர்வாகத்தினர், உலமாக்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்து கொண்டு, புனித நாளின் மகத்துவத்தையும் சமூக ஒற்றுமையின் அழகையும் மேலும் உயர்த்தினர்.
இவ் இப்தார் நிகழ்வு, பகிர்வு, அன்பு, அக்கறை
மற்றும் சமூகப் பொறுப்புணர்வின் சிறந்த வெளிப்பாடாக அமைந்து, கல்முனை சமூகத்தில் ஆன்மிக ஒளியையும் மகிழ்ச்சியையும் பரப்பியதுடன், புனித ரமழானின் உண்மையான அர்த்தத்தை உணர்த்திய நினைவுகூரத்தக்க தருணமாகவும் அமைந்தது.









0 comments: