Wednesday, March 25, 2026

காத்தான்குடி வாவிக்கரை பூங்கா மற்றும் சுற்றுலா படகுச் சேவை ஹிஸ்புல்லாஹ் எம்.பியினால் அங்குரார்ப்பணம் செய்துவைப்பு..!

Ad 728x90

𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒

✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉

காத்தான்குடி வாவிக்கரை பூங்கா மற்றும் சுற்றுலா படகுச் சேவை ஹிஸ்புல்லாஹ் எம்.பியினால் அங்குரார்ப்பணம் செய்துவைப்பு..!
✍️ எஸ். சினீஸ் கான்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………
✅👉 காத்தான்குடி நகரின் அழகையும் சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்தையும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தீர்க்கதரிசனமான சிந்தனை மற்றும் வழிகாட்டலின் பேரில் உருவாக்கப்பட்ட "வாவிக்கரை பூங்கா மற்றும் சுற்றுலா படகுச் சேவை" ஞாயிற்றுக்கிழமை (22) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு திட்டத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.
இவ்விழாவில் நகர சபை உபதவிசாளர், சபை உறுப்பினர்கள், சமூகத் தலைவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் என பெரும்திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.
ஊடகப்பிரிவு
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி


 

SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: