Friday, March 27, 2026

ஊடகத்துறையில் உண்மை, நேர்மை மற்றும் பொறுப்புணர்வின் அடையாளம் - ஊடகவியலாளர் கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீம்..!

Ad 728x90

 

𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒

✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 ஊடகத்துறையில் உண்மை, நேர்மை மற்றும் பொறுப்புணர்வின் அடையாளம் - ஊடகவியலாளர் கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீம்..!
✅👉 அனுதாபச் செய்தியில் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு.
✍️ எஸ். சினீஸ் கான்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீம் அவர்களின் மறைவுச் செய்தி துயரத்தையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.
எனது நீண்டகால நண்பராக இருந்த அவர், ஊடகத் துறையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, உண்மை, நேர்மை மற்றும் பொறுப்புணர்வின் அடையாளமாக திகழ்ந்தார். 1966ஆம் ஆண்டிலிருந்து வீரகேசரி நாளிதழின் பிராந்திய செய்தியாளராக பணியாற்றியதுடன், தினபதி, சிந்தாமணி போன்ற பத்திரிகைகளிலும் தனது பணிப்பாதையை செழுமைப்படுத்தி, சமூகத்தின் உண்மைக் குரலாக உயர்ந்தார்.
அவரது நேர்மையும் தொழில்முறை ஒழுக்கமும் என்னை எப்போதும் கவர்ந்துள்ளது. ஊடகத் துறையின் வளர்ச்சிக்கும், சமூக நலன்களுக்கும் அவர் செய்த பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும்.
அல்லாஹ் (ஸுப்ஹானஹு வ தஆலா) அவர்களின் பாவங்களை மன்னித்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சொர்க்கத்தில் இடமளிக்க பிரார்த்திக்கிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமையை அளிக்கவும் அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ஊடகப்பிரிவு


SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: