Wednesday, March 25, 2026

கல்முனையன்ஸ் போரத்தினால் இவ்வருட ரமழானில் 5755 ஸஹர் உணவுப் பொதிகள் விநியோகம்..!

Ad 728x90

 

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉

கல்முனையன்ஸ் போரத்தினால் இவ்வருட ரமழானில் 5755 ஸஹர் உணவுப் பொதிகள் விநியோகம்..!
✍️ யு.எல்.அலி.ஜமாயில்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………
✅👉 புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு கல்முனையன்ஸ் போரம் அமைப்பினால் வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் "இலவச ஸஹர் உணவு விநியோகம்" இவ்வருடமும் மிகச் சிறப்பான முறையில் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
தூர இடங்களிலிருந்து கல்முனை பிராந்தியத்திற்கு பல்வேறுபட்ட தேவைகளுக்காக வருகை தருபவர்கள் புனித நோன்பினை நோற்பதற்கான ஸஹர் உணவை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவது கல்முனையன்ஸ் போரத்தின் கவனத்திற்கு எட்டப்பட்டதினால் இச்செயற்றிட்டம் கடந்த எட்டு வருடங்களாக தொடர்ந்து தங்குதடையின்றி முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
இத்திட்டத்தின் மூலம் இவ்ரமழான் முழுவதும் மொத்தமாக ரூபா 1,896,600.00 பெறுமதியான 5755 ஸஹர் உணவுப் பொதிகள் கல்முனை, மருதமுனை, சாய்ந்தமருது மற்றும் காரைதீவு ஆகிய பிரதேசங்களுக்கு எவ்வித தடைகளுமின்றி உரிய ஸஹர் நேரத்திற்கு நோன்பாளிகளின் காலடிக்கே சென்று எம்மால் வழங்க முடிந்தது.
மேற்படி ஸஹர் உணவானது ரமழான் காலத்தில் மாலை 5:00 மணியிலிருந்து இரவு 7:00 வரைக்கும் தொலைபேசியூடாக கிடைக்கப்பெறும் முன்பதிவுகள் அடிப்படையில் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி


SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: