Wednesday, March 11, 2026

சம்மாந்துறையில் 4 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை; வழக்குத் தாக்கல் செய்ய ஏற்பாடு..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 சம்மாந்துறையில் 4 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை; வழக்குத் தாக்கல் செய்ய ஏற்பாடு..!
✍️ நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……….
✅👉 புனித றமழான் மாதத்தினை முன்னிட்டு, பொதுமக்களுக்கு சுகாதாரமான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் தொடர்ச்சியான களப்பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
​புதன்கிழமை (04) சம்மாந்துறை கல்லரிச்சல், விழினயடி மற்றும் உடங்கா ஆகிய PHI பிரிவுகளில் விசேட பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது ​வீதியோர சிற்றுண்டி விற்பனை நிலையங்கள், ​தயிர் விற்பனை நிலையங்கள், ​பேக்கரிகள், ​பல்பொருள் அங்காடிகள் (Supermarkets) ​போன்றன சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
​பரிசோதனையின்போது காலாவதியான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தமை மற்றும் பணியாளர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் (Medical Certificate) இல்லாமை போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.
​இந்த சோதனையில் முதன்முறையாக விதிமீறல்களில் ஈடுபட்ட 6 விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
​கடந்த வாரம் எச்சரிக்கை விடுக்கப்பட்டும், அதனைச் சீர்செய்யத் தவறிய 4 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து, வழக்குத் தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
​பொதுமக்களுக்கான வேண்டுகோள்: உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அவற்றின் தரம் மற்றும் காலாவதித் திகதி என்பவற்றில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
சுகாதார நடைமுறைகளை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்





SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: