Friday, February 6, 2026

இலங்கைக் குடியரசின் 78வது சுதந்திர தின வாழ்த்துச் செய்தி..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 🇸🇦🇱🇰
✍️ எஸ். சினீஸ் கான்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, நட்பு நாடான இலங்கை குடியரசின் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த தேசியத் திருநாள் இலங்கை குடியரசின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இது அந்நாட்டு மக்கள் தமது தேசிய இறையாண்மையை நிலைநாட்டவும், அபிவிருத்தி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான பாதையை பலப்படுத்தவும் மேற்கொண்ட சாதனைகளை பிரதிபலிக்கிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில், எமது இரு நட்பு நாடுகளுக்கும் இடையே நிலவும் இருதரப்பு உறவுகளுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு துறைகளில் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வினால் இந்த உறவுகள் அடையாளப்படுத்தப்படுகின்றன. எமது இரு நாடுகளினதும் மக்களினதும் பொதுவான நலன்களுக்காக இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் நான் எதிர்பார்க்கிறேன்.
இலங்கை குடியரசின் இந்த தேசிய கொண்டாட்டத்தில் நானும் இணைந்து கொள்வதுடன், இலங்கை குடியரசு தொடர்ந்தும் பாதுகாப்பாகவும், ஸ்திரத்தன்மையுடனும் விளங்கி, மேன்மேலும் முன்னேற்றத்தையும் சுபிட்சத்தையும் அடைய வேண்டுமென வாழ்த்துகிறேன்.
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்
காலித் ஹமூத் அல்-கஹ்தானி
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்

SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: