𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இலங்கையில், “இரு புனிதஸ்தலங்களின் பாதுகாவலரின்” பேரீச்சம்பழ விநியோகத் திட்டம் மற்றும் நோன்பு நோற்கும் மக்களுக்கான இப்தார் உணவுகள் வழங்கும் உயரிய நோக்கத்தின் கீழ், இலங்கைக்காகான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமுத் அல்-கஹ்தானி அவர்களின் தலைமையில், இந்த உதவிகள் நியாயமான முறையில் மசூதிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் இஸ்லாமிய மையங்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
மேலும், சவூதி அரேபியா மன்னர் சல்மான் மனிதநேய உதவி மற்றும் நிவாரண மையம் மூலம் இலங்கைக்கு 50 டன் பேரீச்சம்பழம் வழங்கப்பட்டுள்ளது. இதனை சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமுத் அல்-கஹ்தானி அதிகாரப்பூர்வமாக வழங்கிவைத்தார்.
இந்த முயற்சி, ரமழான் மாதத்தின் ஆன்மீகமும் மனிதநேய உணர்வையும் பிரதிபலிக்கும் ஒன்றாகும்.
இது மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல் ஸவூத் மற்றும் இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையிலான சவூதி அரேபியாவின் தூய்மையான மனிதநேய பார்வையை வெளிப்படுத்துகிறது.
நாடு மற்றும் மத வித்தியாசங்களை மீறி உலகெங்கிலும் தேவையுள்ளவர்களுக்கு உதவுதல், மனிதநேய சேவையை வழங்குதல் என்பது சவூதி அரசின் முக்கியக் குணமாகும்.
இந்த உதவி இலங்கையின் முஸ்லிம் சமூகத்துக்கும் பொதுமக்களுக்கும் நிம்மதி மற்றும் நம்பிக்கையைக் கொண்டுவருகிறது.
மேலும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் பரஸ்பர மரியாதையை வலுப்படுத்துகிறது.
இலங்கை மக்கள் சார்பில், மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல்ஸவூத் மற்றும் இளவரசர் முகம்மது பின் சல்மான் ஆகியோருக்கு இந்த மனிதநேய உதவிக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அல்லாஹ் இந்த நேர்த்தியான தலைமையின் கீழ் சவூதி அரேபியாவை மனிதநேயத்தின் ஒளியாய் நிலைநாட்டச் செய்வாயாக.






0 comments: