மேலும் கல்லூரியின் அதிபர் எம்.எஸ்.எம்.பைஸால் தலைமையில் பாடசாலை மைதானத்தில் விளையாட்டுகள் நடைபெறவுள்ளது.
பத்து வருடங்களின் பின்னர் நடைபெறவுள்ள இல்ல விளையாட்டுகளில் மின்னத்(பச்சை) ஜன்னத்-(நீலம்), நுஸ்ரத்(மஞ்சல்) ஆகிய இல்லங்கள் பங்கு கொள்ளவுள்ளன.
விளையாட்டு போட்டிகளுக்கான இல்லக் கொடிகள் இல்லத் தலைவர்களின் பங்கேற்புடன் பாடசாலையின் அதிபர் மற்றும் பாடசாலையின் மேம்பாட்டு இணைப்பாளர் ஜெஸ்மி எம்.மூஸா ஆகியோர் முன்னிலையில் வெளியீட்டு வைக்கப்பட்டன.
இல்ல விளையாட்டுப் போட்டிகளுக்கான செயலாளராக ஆசிரியர் யூ.எல்.ஷிபான் செயற்படவுள்ளதுடன் ஏ.எம்.பஸ்மிர்,எம்.வை.எம்.இம்றான், ஏ.ஆர்.எம்.ஹிம்சாத் ஆசிரியர்கள் இல்லங்களின் தலைவர்களாக தொழிற்படவுள்ளனர்.
கரப்பந்து, உதைபந்து, கிறிக்கற் ஆகிய பெரு விளையாட்டுக்கள் 27 ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளன.
பத்து வருடங்களுக்கு பின்னர் இவ்வாறான
செயற்பாட்டினை முன்னெடுத்தமைக்காக பாடசாலை சமூகம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.








0 comments: