Tuesday, January 27, 2026

“கல்விக்கு கரம் கொடுப்போம்” – 500 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் வேலைத்திட்டம்..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 “கல்விக்கு கரம் கொடுப்போம்” – 500 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் வேலைத்திட்டம்..!
✍️ நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 “கல்விக்கு கரம் கொடுப்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் அவர்களின் முன்னெடுப்பில், ரூபாய் 06 லட்சம் செலவில், முதல் கட்டமாக 500 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அப்னான் எடுக்கேஷன் போரம் நிர்வாகிகளிடம் குறித்த கற்றல் உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வித் தேவைகளை கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்கள், பயிற்சி புத்தகங்கள், எழுதுகோல்கள் உள்ளிட்ட அத்தியாவசிய கற்றல் உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான்,
“ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவது கல்வியே. பொருளாதார தடைகள் எந்த மாணவனின் கனவுகளையும் தடுக்கக் கூடாது என்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம். கல்விக்காக வழங்கப்படும் உதவி, நாட்டின் எதிர்காலத்திற்கான முதலீடு” எனக் குறிப்பிட்டார்.
மேலும், இந்த வேலைத்திட்டம் தொடர்ச்சியாக அடுத்த கட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும் என்றும், கல்வி, சமூக நலன் மற்றும் மாணவர் மேம்பாட்டை மையமாகக் கொண்டு பல்வேறு திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கல்வியை முன்னிறுத்திய இந்த முயற்சிக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர். இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் முஹம்மட் ஆஷிக் உட்பட அப்னான் எடுக்கேஷன் போரம் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: