Sunday, June 15, 2025

தியாகத்தின் புனித நாள் - ஹஜ்ஜுப் பெருநாள்..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 தியாகத்தின் புனித நாள் - ஹஜ்ஜுப் பெருநாள்..!
✍️ எஸ். சினீஸ் கான்
- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்.
✅👉 புனித ஈதுல் அழ்ஹா - ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் எமது அன்புக்குரிய இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எமது உளமார்ந்த தியாகத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தனது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;
“ஈதுல் அழ்ஹா” தியாகத்தின் முக்கியத்துவத்தையும், இறைவனுக்கான முழு அர்ப்பணிப்பையும் உணர்த்தும் ஒரு புனித நாளாகும்.
இன்றைய நாள் நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் தியாகம் நிறைந்த செயலை எமக்கு கற்பித்துத் தருகிறது. அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, தமது மகனை இறைவனுக்காகத் தியாகம் செய்யத் தயாரானார். இந்த அர்ப்பணிப்பு, இறைவனின் சோதனைக்கு எதிரான ஓர் அற்புதமான பதிலாகும்.
இந்த நாளில் நாம் ஏழைகளுடன் உணவையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வோம், சமூக நல்லிணக்கத்தையும், அன்பையும் வளர்க்கும் நாள் இது. உண்மையான ஈமானும், தியாகமும் நிறைந்த இந்த புனித நாளில், நாம் அனைவரும் அல்லாஹ்வின் அருளை பெற வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் தியாகத்தின் சிறப்பு நமக்கெல்லாம் வழிகாட்டட்டும்.
உலகம் முழுவதும் கொண்டாடும் அனைத்து உடன்பிறப்புக்களுக்கும் எனது அன்பு நிறைந்த ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் - என அவரது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: