
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 







இந்நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.ஜுனைடீன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
முகாமைத்துவ வர்த்தக பீடத்திற்கு 2023/2024 ஆம் கல்வியாண்டுக்காக 403 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர். குறித்த மாணவர்களை சிரேஷ்ட மாணவர்கள் உணவுகள் மற்றும் அன்பளிப்புகள் வழங்கி வரவேற்றது விஷேட அம்ஷமாகும்.
நிகழ்வின்போது மாணவர்கள் தொடர்பான ஆவணங்களை பதிவாளர் எம்.ஐ. நௌபர் மற்றும் சிரேஷ்ட உதவி பதிவாளர் எவ். பாரிஷா எம் ஹசன் ஆகியோரது பங்குபற்றலுடன் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் மாணவர்களுடன் சம்மந்தப்பட்ட துறைத்தலைவர்களிடம் ஒப்படைத்தார்.
திணைக்களங்களின் தலைவர்களான பேராசிரியர் கலாநிதி எம்.பி.எம். இஸ்மாயில், பேராசிரியர் கலாநிதி ஏ.இல்முடீன், பேராசிரியர் கலாநிதி எம்.ஏ.சி. சல்பியா உம்மா மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.சி.என். சபானா ஆகியோர் தாங்கள் சார்ந்த துறைகளில் இணைந்துள்ள மாணவர்கள் கையாளவேண்டிய நடைமுறைகள் மற்றும் குறித்த துறைகளின் ஊடாக மாணவர்கள் அடையக்கூடிய நன்மைகள் தொடர்பில் உரையாற்றினர்.
முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் மாணவர் சங்க தலைவர் டி.எம்.ஏ.எஸ். தஸநாயக்க புதிய மாணவர்களை வரவேற்றதுடன் சிரேஷ்ட மாணவர்களுடன் இணைந்து தங்களது சிறந்த கற்றல் செயற்ப்பாடுகளை தொடர முடியும் என்றும் தெரிவித்தார்.
நிகழ்வில் மாணவர்களை வரவேற்று கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. பிரதி பதிவாளர் பி.எம். முபீன் நன்றியுரை நிகழ்த்தினார்.
நிகழவில் கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் மற்றும், நூலகர் எம்.எம். றிபாவுடீன், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் பிரதம பாதுகாப்பு உத்தியோகத்தர், கல்விசாரா உதிதியோகத்தர்கள் மாணவர்கள் மற்றும் புதிதாக இணைந்துகொண்ட மாணவர்களின் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments: