

ப
ல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களை பழைய மாணவர் சங்கம் கௌரவிக்கும் நிகழ்வு..!


இலங்கைப் பரீட்சைத்திணைக்களத்தினால் அண்மையில் வெளியீடு செய்யப்பட்ட க.பொ.த (உ/த) பரீட்சை - 2024 (2025) பெறுபேறுகளின் படி கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலய பாடசாலையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான நினைவு சின்ன வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு 10/05/2025 பாடசாலை அதிபர் எம்.ஏ.சலாம் சேர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்வில் பிரதி அதிபர்,உதவி அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் SDEC செயளாலர்,PPA செயளாலர்,PPA உறுப்பினர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் விஞ்ஞானப் பிரிவில் மாவட்டரீதியல் சாதனை புரிந்த மாணவர்கள் இருவருக்கும் விஷேடமாக தங்க நாணயங்கள் பழைய மாணவ சங்க செயளாலர் யூ.எல்.ஹாஜா அவர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
0 comments: