
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 







அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஆழ்கடல் மீனவர் சங்கங்கள், மீனவர் சமாசங்கள், மீனவர் சம்மேளனங்கள், மீனவர்கள் ஆகியன இணைந்து சாய்ந்தமருதில் இன்று நடத்திய மீன் திருட்டை ஒழிப்பது தொடர்பாக ஒன்று கூடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு மீனவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,
கடந்த காலங்களில் இருந்த அரசியல்வாதிகள் ஒலுவில் துறைமுகம் பற்றியோ, மீனவர்களின் பிரச்சினைகள் பற்றியோ எங்கும் பேசவில்லை. மீனவர்களுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க முன்வரவில்லை. நான் பல வருடங்களாக பல்வேறு தரப்பினர்களையும் அணுகி மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க பல்வேறு முயற்சிகளை செய்து கொண்டு தான் இருக்கிறேன். நாங்கள் ஜே.வி.பியை இங்கு அறிமுகம் செய்தபோது யாரும் எங்களை ஆதரிக்கவில்லை. ஆனால் மீனவர்கள் இம்முறை என்னுடன் சேர்ந்து வெற்றிக்காக உழைத்தார்கள். ஆனபோதிலும் நான் தோல்வி அடைந்தேன். கொள்கைகளை மாற்றி ஜனாதிபதி என்னை பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளார்.
பலருடைய குடும்பத்தின் வாழ்வாதாரமான இந்த தொழில் இப்போது கஷ்டத்தை உடைய நிலைக்கு சென்றுள்ளது. அந்த நிலையை நானும் அறிவேன். மீனவர்கள் போராட்டம் செய்து 10-15 நாட்களுக்குள் தீர்வு அடையலாம் என்று எண்ணுகிறார்கள். அது சாத்தியமில்லை. அரசாங்கம் அமைக்கப்பெற்று 06 மாதங்களே கடந்துள்ளது. ஜனாதிபதி, உரிய அமைச்சர்கள், உரிய அதிகாரிகளை கொண்டு விரைவில் தீர்வை பெற்றுத் தருவேன் என்றார்.


0 comments: