
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 







ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபாவின் முன்னிலையில் பதில் உபவேந்தர் யூ.எல்.மஜீத் தலைமையில் சனி, மற்றும் ஞாயிர் இரு தினங்களாக நடைபெறவுள்ள இப்பட்டமளிப்பு விழாவில் ஆறு அமர்வுகளில் 2077 மாணவர்கள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.
முதலாம் நாள் முதல் அமர்வில் இலங்கை உயர் நீதிமன்ற நீதிபதி யசந்த கொடகொட பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இரண்டாம் அமர்வில் களனி பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர் கலாநிதி சீதா.பி. பண்டாரவும் மூன்றாவது அமர்வில் இலங்கைக்கான சவூதி அரேபிய நாட்டின் தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானியும் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இன்றைய முதல்நாளில் பிரயோக விஞ்ஞான பீடத்தில் 172 மாணவர்களும் பொறியியல் பீடத்திலிருந்து 82 மாணவர்களும் தொழினுட்பவியல் பீடத்திலிருந்து 102 மாணவர்களும் கலை கலாச்சார பீடத்திலிருந்து 314 மாணவர்களும் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்திலிருந்து 342 மாணவர்களும் பட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
நாளை இரண்டாம் நாள் முதல் அமர்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் துணைத்தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கே.எல் வசந்த குமாரவும் இரண்டாம் அமர்வில் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவ துறையின் பேராசிரியர் கலாநிதி மனோஜ் சமரதுங்கவும் மூன்றாவது அமர்வில் யாழ் பலகலைக்கழகத்தின் பட்டப்படிப்பு பீடத்தின் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் ரீ. வேல்நம்பியும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்திலிருந்து 378 மாணவர்களும் வெளிவாரி பட்டப்படிப்பு மாணவர்கள் (FAC & FMC) 687 மாணவர்களுமாக 2077 மாணவர்கள் பட்டங்களைப் பெறவுள்ளதாக பதில் பதிவாளர் எம்.ஐ. நெளபர் தெரிவித்துள்ளார்.
0 comments: