Tuesday, April 22, 2025

ஓட்டமாவடியை கட்டியெழுப்ப சந்தர்ப்பம் தாருங்கள் - கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் எம்பி..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 ஓட்டமாவடியை கட்டியெழுப்ப சந்தர்ப்பம் தாருங்கள் - கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் எம்பி..!
✍️ எஸ். சினீஸ் கான்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் மு.கா சார்பாக போட்டியிடும் மீராவோடை மேற்கு வேட்பாளர் ஜ.எம்.றிஸ்வினை ஆதரித்து பிரசார கூட்டம் நேற்று (17) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கலந்து சிறப்பித்தார்.
அவர் இதன்போது அவர் கருத்துத்தெரிவிக்கையில்,
ஓட்டமாவடி மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். நீங்கள் சிந்தித்து வாக்களித்து ஒன்பது வட்டாரங்களையும் வெற்றி பெற வைத்து, சபையை எங்களிடம் ஒப்படைத்து விட்டு நிம்மதியாக இருங்கள்.
எதிர்வரும் நான்காண்டுகளுக்கு, சகல அதிகாரங்களையும் கொண்டு நாங்கள் உங்கள் பிரதேசத்தைக் கட்யெழுப்புவோம். அதற்கான முழுமையான சந்தர்ப்பதையும் எமக்குத்தாருங்கள் என அவரது உரையில் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடா தொகுதி அமைப்பாளரும் முதலாம் வட்டார வேட்பாளருமான சிரேஷ்ட சட்டத்தரணி ஹபீப் றிபான், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், ஓட்டமாவடி பிரதேச மத்திய குழு உறுப்பினர்கள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் எனப்பலரும் பங்கேற்றிருந்தனர்.
- ஊடகப்பிரிவு

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: