Sunday, April 27, 2025

கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தில் பாடசாலை கவின் கலைப் போட்டி 2025..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தில் பாடசாலை கவின் கலைப் போட்டி 2025..!
✍️ நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 ஆசிரியர்கள், மாணவர்களின் கற்பித்தல், கற்றல் செயற்பாடுகளில் உளரீதியான மனப்பாங்குகளை மாற்றமடையச் செய்யும் நோக்குடன் வருடா வருடம் நடத்தப்படும் வகுப்பறைக் கவின் நிலை போட்டி கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம்.றிசாத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கல்முனை கல்வி வலயத்தின் ஆரம்ப பிரிவு கவின் கலை போட்டி விதிமுறைகளுக்கு அமைவாக தரம் 1 தொடக்கம் தரம் 5 வரை நடைபெற்ற இப்போட்டியில் பாடசாலையின் ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகர் ஐ.எல்.அப்துல் ரஹ்மான், ஆரம்பப் பிரிவு வளவாளர் எம்.எம்.ஏ.ஹபீழ் ஆகியோர் பார்வையிட்டு மதிப்பீடுகளில் ஈடுபட்டனர்.
மேலும் பாடசாலையின் கவின்கலை போட்டி இணைப்பாளர்களான ஆசிரியர் எம்.சீ.ஹிஜாஸ், ஆசிரியர் ஏ.ஆர். பைறூஸ் கான் ஆகியோரின் நெறிப்படுத்தல், மற்றும் ஒருங்கிணைப்பிலும் இந்நிகழ்வு நடைபெற்றது. பாடசாலையின் பிரதி அதிபர் எம்.ரீ.ஏ.முனாப், மற்றும் பாடசாலை முகாமைத்துவ குழு வின் சிரேஷ்ட ஆசிரியர் திரு. முஜிப்டீன் ஆகியோர் இணைந்து இந் நிகழ்வை ஆரம்பித்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்






SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: