Tuesday, April 22, 2025

அரசியல்வாதிகளின் பொய்யான வாக்குறுதிகளையும், பகட்டு கதைகளையும் நம்பி இனியும் வாக்களிக்க மக்கள் தயாரில்லை - தலைமை வேட்பாளர் எம்.ஏ. நளீர்

Ad 728x90

 


அரசியல்வாதிகளின் பொய்யான வாக்குறுதிகளையும், பகட்டு கதைகளையும் நம்பி இனியும் வாக்களிக்க மக்கள் தயாரில்லை - தலைமை வேட்பாளர் எம்.ஏ. நளீர்

நூருல் ஹுதா உமர்
நாவிதன்வெளியை இவ்வளவு காலமும் பொய்யான வாக்குறுதிகளையும், பகட்டு கதைகளையும் கூறி ஏமாற்றிவந்த அரசியல்வாதிகளை புறமுதுகு காட்டி ஓடவிடுமளவுக்கு நாவிதன்வெளி மக்கள் தெளிவாக இருப்பதுடன் ஊழல்களை செய்து கொண்டு இனவாதம் பேசிக்கொண்டு மக்களை ஏமாற்ற எத்தனிக்கும் அரசியல்வாதிகளுக்கும், அவர்களின் அரசியல் கட்சிகளுக்கும் மக்கள் மே 06இல் நல்ல பாடம் கற்பிப்பார்கள் என நாவிதன்வெளி பிரதேச சபைக்கு கால்பந்து சின்னத்தில் சுயட்சையாக தலைமை வேட்பாளராக போட்டியிடும் நளீர் பௌண்டஷன் நிறுவுனர் எம்.ஏ. நளீர் தெரிவித்தார்.
நாவிதன்வெளி பிரதேச சபை வேட்பாளர் முஹம்மட் ஹலால் தலைமையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும், அகில இலங்கை மக்கள் காங்கிரசும் இன்னும் சில சில்லறை கட்சிகளும் சேர்ந்து கொண்டு தேர்தல் காலங்களில் இங்கு படையெடுத்து நடைமுறை சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்கி அவற்றை ஒருகாலமும் நிறைவேற்றாது ஏமாற்றும் வேலையையே தொடர்ந்து செய்து வருகிறார்கள். இவர்களின் ஏமாற்று அரசியலை நம்பி நாம் தொடர்ந்தும் இவர்களுக்கு வாக்களிக்க முடியாது.
அரசியல்வாதிகளின் பொய்யான வாக்குறுதிகளையும், பகட்டு கதைகளையும் நம்பி இனியும் வாக்களிக்க மக்கள் தயாரில்லை என்பதை நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் தெளிவாக கூறிக் கொண்டிருக்கிறார்கள். நாவிதன்வெளி பிரதேசத்தை இருண்ட பிரதேசமாக தொடர்ந்தும் வைத்திருக்க முடியாது. எமது பிரதேச வளங்களை முழுமையாக பயன்படுத்தி அவற்றை கொண்டு மக்களின் வாழ்வியலை மேம்படுத்த தேவையான வேலைத்திட்டங்களை நாங்கள் வென்றால் நிச்சயம் செய்வோம் என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்.
பொய்யான கதைகளை கூறி ஆட்சியை பிடித்த ஆளும்தரப்பினர் தோல்வியை அறிந்துகொண்டு இப்போது மேடைகளில் தடுமாற ஆரம்பித்துள்ளார்கள். எங்களிடம் எவ்வித தடுமாற்றங்களும இல்லை. அதிகாரமில்லாது நாங்கள் கடந்த காலங்களில் செய்து கொண்டிருந்ததை இப்போது அதிகாரத்துடன் செய்ய மக்களை நாடி வந்துள்ளோம். இதனை மக்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர். கடந்த காலங்களில் சர்வதேச உதவிகளை பெற்று நாவிதன்வெளி பிரதேச நிறைய உட்கட்டமைப்பை நாங்கள் செய்துள்ளோம். வீடமைப்பு, நீர்வழங்கல், மின்சாரம் வழங்கல், வாழ்வாதாரம் வழங்கல், உதவிங்களை வழங்குதல் என நிறைய சேவைகளை அதிகாரமில்லாமலே செய்துள்ளோம். அதிகாரம் கிடைக்கும் போது உத்வேகத்துடன் நிறைய பணிகளை மக்களுக்கு செய்ய தயாராக இருக்கிறோம் என்றார்.
இந்த கூட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச சபை முன்னாள் உபதவிசாளர் ஏ.கே. அப்துல் சமட், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எம். சுவைதீன், நாவிதன்வெளி பிரதேச சபைக்கு கால்பந்து சின்னத்தில் சுயட்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்





SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: