🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி நீச்சல் வரலாற்றில் புதிய மைல்கல்..!
✍️ நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………
✅👉 ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி தனது விளையாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது. கொழும்பு சுகததாச விளையாட்டரங்க நீச்சல் தடாகத் தொகுதியில் நடைபெற்ற 17வது அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில், கல்லூரியின் நீச்சல் அணி முதன்முறையாக பங்கேற்று குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பதிவு செய்துள்ளது.
கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக தேசிய மட்ட நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற மாணவராக எம்.எஸ்.எம். ராயீத் இடம்பிடித்துள்ளார். அவர் 50 மீற்றர் பின்நீச்சல் (Backstroke) போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன், 50 மீற்றர் சுதந்திர நீச்சல் (Freestyle) போட்டியிலும் தகுதி நேரத்தைப் பதிவு செய்து மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அதேவேளை, எம்.எஸ்.எம். ராஷித் 50 மீற்றர் பின் நீச்சல் மற்றும் 200 மீற்றர் தனிநபர் கலப்பு நீச்சல் (Individual Medley) போட்டிகளில் தகுதி நேரத்தை பதிவு செய்து கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். இப்போட்டியில் ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்தி எம்.எச்.எம். ஹம்தான், எம்.எஸ்.எம். ராஹிக், ஏ.எச். ஹுஸைபா, எம்.எச்.எம். ஹுமைத், எப். மஹ்தி, எம்.ஆர்.எம். ரஹீஷ், எம்.எஸ்.எம். ராஷித், எம்.எஸ்.எம். ராயீத் ஆகிய எட்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். நீச்சல் அணி ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் திறமையுடன் போட்டியிட்டு கல்லூரியின் கீர்த்தியை உயர்த்தியுள்ளனர்.
இந்த வரலாற்றுச் சாதனையை முன்னிட்டு கல்லூரி அதிபர், நிர்வாகம், விளையாட்டுக் குழு, பழைய மாணவர் சங்கம் மற்றும் முழு பாடசாலை சமூகமும் மாணவர்களுக்கு தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளன. “இது எமது கல்லூரியின் நீச்சல் விளையாட்டு வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும். இம்மாணவர்களின் அர்ப்பணிப்பும் முயற்சியும் எதிர்காலத்தில் மேலும் பல தேசிய மற்றும் சர்வதேச வெற்றிகளுக்கு வழிவகுக்கும்” என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்




0 comments: