எஸ் எம் எம் றம்ஸான்
இன்றுடன் ஆரம்பிக்கப்படும் புத்தாண்டில்
ஒரே கொடியின் கீழ் நிழல் பெறும் ஒரே நாடாகவும் ஒரே தேசமாகவும் கம்பீரமாக எழுந்து நிற்பதற்கும் குறிக்கோளினால் ஈர்க்கப்பட்ட மக்களின் அபிமானத்தை எடுத்துரைக்கவும் மற்றும் அவ்வாறே "வளமான நாடு அழகான வாழ்க்கை" ஊடாக
சவால்களின் முன்னணியில் தயங்க மாட்டோம் எனும் தொனி பொருளில் சாரத்தை அதனூடாக எடுத்துக்காட்டாகவும் வழிகாட்டும் ஒழுங்கமைக்கப்பட்ட அரசு நிர்வாகம் ஒன்றின் பங்காளர் ஒருவர் என்ற வகையில் நான்
பொது மக்களின் பணத்திலிருந்து சம்பளம் பெறும் அரச ஊழியர் எனும் ஒருவர் என்ற வகையில் அரச கொள்கைகள் மற்றும் இலக்குகளை நடைமுறைப்படுத்தும் போது
என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள கடமை பொறுப்பினை வினைதிறனுடனும்,பயனுறுதியுடனும்,செயலூக்கத்துடனும்,அதிகூடியஅர்ப்பணிப்புடனும்,நேர்மையுடனும்,பொதுமக்களுக்கு சார்பாகவும்,
முழு நிறைவாக நிறைவேற்றுவதாக உறுதிமொழிகின்றேன் என சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.
கல்முனை வலைய கல்வி பணிப்பாளர் எம் எஸ் சஹதுல் நஜீம் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக இடம் பெற்ற இந்நிகழ்வில் வலைய கல்விப் பணிமனையின் பிரதிகல்வி பணிப்பாளர், உதவி கல்விப் பணிப்பாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர், கணக்காளர், திட்டமிடல் உத்தியோ கத்தர், ஆசிரிய ஆலோசர்கள் மற்றும் வலைய கல்வி பணிமனையின் ஏனைய உத்தி உத்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.






0 comments: