𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டிலும், கல்முனை இஸ்லாமாபாத் விளையாட்டு கழகத்தின் தலைமையிலும் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வில், கல்முனை முன்னாள் மாநகர சபை பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
நிகழ்வின் போது மாணவர்களை நோக்கி உரையாற்றிய ரஹ்மத் மன்சூர் அவர்கள், கல்வி என்பது ஒரு சமூகத்தின் நிலைத்த முன்னேற்றத்திற்கான அடித்தளமாகும் என வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, தனது பொற்கரங்களால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார். மாணவர்களின் கல்வி பயணத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்குவது ரஹ்மத் பவுண்டேசனின் முதன்மை நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் உயர்பீட உறுப்பினர்கள், சமூக முக்கியஸ்தர்கள், பெருந்திரளான பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். அனைவரின் ஒத்துழைப்புடனும் பங்களிப்புடனும் இந்நிகழ்வு வெற்றிகரமாக நிறைவடைந்தது.












0 comments: