Thursday, January 8, 2026

கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தில் ஏ. ஆர். மன்சூர் தொழிநுட்ப அறை திறப்பும், ஸ்மார்ட் போர்ட் வழங்கும் சிறப்பு நிகழ்வும்..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தில் ஏ. ஆர். மன்சூர் தொழிநுட்ப அறை திறப்பும், ஸ்மார்ட் போர்ட் வழங்கும் சிறப்பு நிகழ்வும்..!
✍️ நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 கல்முனை கல்வி வலய கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தின் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு கல்வி விசேட வேலைத்திட்டத்தின் கீழ் "ஸ்மார்ட் போர்ட்" கையளிக்கும் சிறப்புவிழா இன்று (06) பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். றிஷாத் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் பிரதம அதிதியாக பங்கேற்றதுடன்,கல்முனை கல்வி வலய பிரதிக் கல்வி பணிப்பாளரும், சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளருமான அஸ்மா அப்துல் மலீக் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்ட இந்நிகழ்வில், ஏ.ஆர். மன்சூர் தொழிநுட்ப அறை திறந்து வைக்கப்பட்டதுடன், ஸ்மார்ட் போர்ட் உத்தியோகபூர்வமாக ரஹ்மத் மன்சூர் அவர்களினால் பாடசாலைக்கு கையளிக்கப்பட்டது.
இந்த சிமாட் டீவி வழங்கும் செயற்பாட்டிற்கு ஒரு மில்லியன் பெறுமதியான ஸ்மார்ட் டீவியை ரஹ்மத் மன்சூர் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் இந்நிகழ்வு, மாணவர்களின் எதிர்கால கல்விப் பயணத்திற்கு ஒரு புதிய திசையைத் தரும் ஒரு வரலாற்று நிகழ்வாகும்.
இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர், உதவி அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், ரஹ்மத் பவுண்டேசனின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் இதன் போது பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு,இஸ்லாமாபாத் விளையாட்டு கழகம்,இஸ்லாமாபாத் அக்கரைக் குழு ,இஸ்லாமாபாத் ஜனாஸா நலன்புரி அமைப்பினால் பிரதமஅதிதிக்கு நினைவு சின்னம் வழங்கியும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும் .
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்























SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: