அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகாதுஹு!
எமது நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான மனிதாபிமான செயற்றிட்டத்தில் GFK Qatar இன் பணிகள் தொடர்கின்றன…
அல்ஹம்துலில்லாஹ்!
மூன்று கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ள இத்திட்டமானது,
எமது GFK அமைப்பின் அனுசரணையில் கல்முனை Young Birds Janaza Welfare Organization ஒழுங்கமைப்புடன் 50 இற்கும் மேற்பட்ட எமது சகோதரர்களினால் சுத்தம் செய்யும் சிரமதான வேலைத் திட்டம் கல்முனையிலிருந்து பாதிக்கப்பட்ட பிரதேசங்களை நோக்கிப் பயணிக்கின்றது அல்ஹம்துலில்லாஹ்!
வீடுகளை சுத்தம் செய்து அங்கு ஏற்பட்டிருக்கும் அனர்த்த நிலையை இயல்பு நிலைமைக்கு கொண்டு வரும் பணிக்காக, எமது கல்முனை Young Birds Janaza Welfare Organaiziation தொண்டர்கள் மற்றும் நிருவாக உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், இளம் துடிப்புள்ள இளைஞர்கள், நிவாரண மீட்பு குழுவினர் என
பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
இப் பயணத்தில் எம் அனைவரினதும் நல்ல எண்ணங்களை எல்லாம் வல்ல இறைவன் பொருந்திக்கொள்வானாக.
மேலும் எங்களுக்கு பாதுகாப்பளிப்பனாக!
ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
“சேற்றில் புதைந்த வீடுகளில் நம்பிக்கையை விதைப்போம்.”
ஊடகப் பிரிவு,
GFK-Qatar.
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


0 comments: