எஸ் ஜே புஹாது
சேனநாயக்க சமுத்திரத்தின் கீழ்நோக்கி ஓடும் கல் ஓயா நதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது, மேலும் நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டால், ஆற்றின் நீர்மட்டம் கணிசமாக உயரும்.
எனவே பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உடனடியாக அறிவுறுத்துமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேயவிக்கிரம பிரதேச செயலாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
1. தமன
6. நிந்தவூர்
2. அம்பாறை
7. காரைதீவு
3. எரகம
8. சாய்ந்தமருது
4. அட்டாளைச்சேனை
9. கல்முனை
5. சம்மாந்துறை
10. நாவிதன்வெளி
11. இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம், ஒலுவில் அருகே உள்ள தாழ்வான பகுதிகள்
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தயாராக இருப்பதை உறுதிசெய்து, பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க கிராம அலுவலர்களுக்கு அறிவுறுத்துங்கள். சம்பந்தப்பட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


0 comments: