Sunday, December 14, 2025

கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள், ஜம்இய்யதுல் உலமா மற்றும் பொது அமைப்புகளினால் நிவாரணப் பொதிகள் கையளிப்பு..!

Ad 728x90

 


📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள், ஜம்இய்யதுல் உலமா மற்றும் பொது அமைப்புகளினால் நிவாரணப் பொதிகள் கையளிப்பு..!
✍️ எம். என். எம். அப்ராஸ்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் ஜம்இய்யதுல் உலமா, பொது நிறுவனங்கள் சம்மேளனம், வர்த்தக சங்கங்கள், ஊர் மக்கள் ஆகியோரின் பங்களிப்பில் கல்முனை அனர்த்த நிவாரண முகாவைத்துவ பணிமனையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகச் சென்று வழங்கி வைக்கப்பட்டது.
சீரற்ற காலநிலையினால் மிகவும் பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்ட வெல்லம்பிடிய மெகடகொலன்னாவ பிரதேச மக்களுக்கு நிவாரணப் பொதிகள் (10) புதன்கிழமை கையளிக்கப்பட்டது.
இங்கு 850 குடும்பங்களுக்கு இந்த நிவாரணப் பொதிகள் கையளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மேற் குறித்த நிவாரண பணியின்
மற்றுமொரு ஒரு தொகுதி மல்வான ரக்ஷபான பிரதேச மக்களுக்கு நிவாரணப் பொதிகள் (10) புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு 450 குடும்பங்களுக்கு இந்த நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் மல்வானை விதானகொடை மற்றும் காந்தியவெலவ பிரதேச மக்களுக்கான நிவாரணப் பொதிகள் விதானகொடை ஹிதாயா ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் காந்தியவெலவ ஜும்ஆ மஸ்ஜித் நிருவாகிகளிடம் கையளிக்கப்பட்டது. மக்களுக்கு நிவாரணப் பொதிகள் (11) வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது.
பொலனறுவைக்கு நிவாரணப் பொதிகள் திவுலான அப்ரார் ஜும்ஆ மஸ்ஜிதின் ஆலோசனைகளுக்கமைய பிரதேச மக்களுக்கு நிவாரணப் பொதிகள் (11) வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது.
பொலனறுவை மானிக்கம்பிடிய மக்களுக்கு மானிக்கம்பிடிய ஹுதா ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் கிராம சேவகரின் ஆலோசனைகளுக்கமைய நிவாரணப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன
மேலும் மூதூர் பால நகர் பகுதியில் ஜாமிஉல் அல்பர் ஜும்ஆ பள்ளிவாசலில் வெள்ளத்தினால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணப் பொதிகள் (11) வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்













SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: