இக் கண்காட்சியினை வலயக் கல்விப் பணிப்பாளர் திரு எம்.எஸ்.சஹுதுல் நஜீம் , பாடசாலை அதிபர் திரு. ஏஜீ.எம். றிசாத், ஆகியோர் நாடாவெட்டி நிழ்வை ஆரம்பித்துவைத்தனர்.
மேலும் இவர்களுடன் இணைந்து சித்திரப்பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகர், பாடசாலை பிரதி அதிபர், பகுதித்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களும் பார்வையிட்டனர்.
சித்திரப் பாட ஆசாரியர் ஏ.எஸ்.எம் நிஸ்வி அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கன்காட்சிக்கான ஆக்கங்கள் ஆனைத்தும் தரம் 9 மாணவர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டவைகளாகும். கழிவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒட்டுச் சித்திரங்கள், இரேகைச் சித்திரங்கள், அலங்காரச் சித்திரங்கள், தூரதரிசனக் காட்சிகள் எனப் பலவகையான சித்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அத்தோடு மக்கா நகரில் அமையப் பெற்றுள்ள கஃபாவின் சாயலை ஒத்த மாதிரிகஃபாவும் மாணவர்களால் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனை மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
மேலும் இக்கண்காட்சியினை பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் பார்வையிட்டதனைப் படங்களில் காணலாம்.
















0 comments: