𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் காரைதீவு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து நடத்திய இந்த கலாசார விழாவில் காரைதீவு, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி பிரதேச கலைஞர்கள், இந்த பிரதேசங்களை சேர்ந்த பாடசாலைகளின் மாணவர்கள் கலந்துகொண்டு பல்லின கலை, இலக்கிய, கலாசார நிகழ்ச்சிகளை வழங்கினர்.
இதன்போது பிரதேச கலாசார போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ்கள், பரிசில்கள், நினைவு சின்னங்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் டீ.எம். றிம்ஸான், காரைதீவு பிரதேச உதவி பிரதேச செயலாளர் எஸ். பிரணவரூபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் பி. ராஜகுலேந்திரன், மேலதிக மாவட்ட பதிவாளர் திருமதி ஆர். சஜிந்தா உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.












0 comments: